உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் “சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு” எனும் தலைப்பில் ஆண்டு தோறும் சித்துவிலி சித்தம் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது.
ஆரம்பப் பிரிவு முதல் உயர் தரம் வரையிலான மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டங்களில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேசியமட்டப் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
மாணவர்களின் ஆளுமையை விருத்தி செய்யும் முகமாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடாளாவிய ரீதியில் பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர்கள், மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் பிரபாகர், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

