அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு இளைஞர் கழக சம்மேளனம் நடத்தும் 35வது பிரதேச விளையாட்டு விழாவானது நேற்று(05) அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வானது ஆலையடிவேம்பு இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் மிருஜன் தலைமையிலும் இளைஞர் சேவை அதிகாரி ஜெயராஜின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் இளைஞர்களின் பரிதிவட்டம் வீசுதல், ஈட்டி எறிதல் மற்றும் ஓட்டம் என பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதில் பங்குபற்றி வெற்றி ஈட்டியவர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரவியராஜ் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக ஆலையடிவேம்பு தவிசாளரும் கங்கா சாகரிகவின் உதவிப்பணிப்பாளருமான தர்மதாச, அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் முபாறக் அலி மற்றும் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஸ்ரீவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் விசேட அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ், இளைஞர் சேவை அதிகாரி, சமுக சேவையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் குறித்த நிகழ்வுக்கான வெற்றிக்கிண்ணங்கள் ஆலையடிவேம்பு பிரதேச தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களின் அனுசரனையில் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

