திருகோணமலை நகரில் உள்ள வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் வீதியால் பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
காலை நேரங்களில் வேலைக்குச் செல்கின்றவர்களும், பாடசாலைக்கு அவசர அவசரமாக செல்கின்ற மாணவர்களும் வீதிகளில் செல்கின்ற கட்டாக்காலி மாடுகளினாலும் அவை வீதியில் போடுகின்ற சாணத்தினாலும் விபத்துகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.
எனவே குறித்த கட்டாக்காலி மாடுகள் தொடர்பில் மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

