தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ”கிளீன் சிறிலங்கா”தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் சரியாக நடை முறையில் இல்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
“கிளீன் ஸ்ரீலங்கா” என்பது இலங்கை அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு நாடு தழுவிய தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டமாகும்.
இது பௌதீக சூழலை சுத்தப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், சமூக மற்றும் நெறிமுறை விழுமியங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் அம்சங்கள் பின்வருமாறு:
சுற்றுச்சூழல் தூய்மை: கடற்கரைகள், ஆறுகள், பொது இடங்கள், புகையிரத நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்தல்.
ஆனால், கல்முனை மாநகர சபையைப் பொறுத்தவரை ஒரு தேர்தல் தொகுதியை உள்ளடக்கி சாய்ந்தமருது, கல்முனை முஸ்லிம் பகுதி, கல்முனை தமிழ் பகுதி, இஸ்லாமாபாத், பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, துறைநீலாவணை, மணல்சேனை ஆகிய ஊர்களை உள்ளடக்கியதாக இச் சபையால் எவ்வாறு இந்த பரந்த பிரதேசத்தை பராமரிப்பு செய்து ”கிளீன் சிறிலங்கா” திட்டத்தை செயல்படுத்த முடியும் என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

