கோறளைப் பற்று மத்தி மற்றும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொதிகளை Colombo centennial Rotary Club இன்று வழங்கி வைத்தினர்.
கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதியின் வேண்டுகோளுக்கிணங்க இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதாக Rotary club தலைவர் தெரிவித்தார்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் காயன்கேணி கிராமம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை மற்றும் தியாவட்டவான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட வாழ்வாதரம் பாதிக்கப்பட்டவர்களுக்கே இவ் உலர் உணவுப் பொதிகன் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் ஜனகபல்லேகும்புர, 23 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜென்ரல் பிரியங்க குலதிலக, Colombo Centennial Rotary Club தலைவர் சேர்வோன் பெனான்டோபிள்ளை ரோற்றரி கழக உறுப்பினர்கள் மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

