கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கை (நவம்பர் 10, 2025 இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்) ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை அவதான நிலையம் அறிவித்ததுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் செயல்பாட்டினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

