ஏறாவூரில் பெண் ஒருவரை இரண்டு கூரிய வாள்களுடன்; நேற்று(09) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து சம்பவ தினமான நேற்று பொலிஸார் ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள மையவாடி வீதி மீராகேன் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன் போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய இரு வாள்களை மீட்டதுடன் 41 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்தனர். இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த பெண்ணின் கணவர் ஏற்கனவே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

