வீடொன்றில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த சந்தேக நபரை தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை(10) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
37 வயது மதிக்கத்தக்க வட்டுக்காய் என அழைக்கப்படும் இச்சந்தேக நபர் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய செயற்பட்ட சாய்ந்தமருது பொலிஸார் சந்தேக நபரை ஒரு தொகுதி போதைப்பொருள், போதைப்பொருளை அளவீடு செய்யும் தராசு, பைக்கற் செய்யும் பொலித்தீன் மற்றும் கத்திரிக்கோல் உள்ளிட்ட பொருட்களையும் மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் நீண்ட காலமாக போதைப்பொருட்களை பதுக்கி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த குறித்த சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.
இதன்போது சந்தேக நபரை மேலதிக விசாரணை மேற்கொள்வதற்காக தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

