தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வரும் இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
வருகை தந்த இளைஞர் யுவதிகளால் இன்று(14) காலை 9:30 மணியளவில் மாசார் சிறுவர் ஆனந்த சுற்றுப்பகுதியில் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இவ் இளைஞர் யுவதிகளால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கபடவுள்ளதாகவும் குறிப்பாக மர நடுகை கலை கலாசாரம் சார்ந்த நிகழ்வுகள் உணவுப்பழக்கம் மற்றும் சமய வழிபாடுகள் திட்டம் இடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளனர்.
இச் சிரமதானப் பணியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள், மாசார் கிராம அலுவலர், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் சுஜீபன் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


