காயன்கேணியில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் கரையொதுக்கம்

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காயன்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த சடலம் கடலில் மிதந்து வந்த நிலையில் கரையில் ஒதுக்கியுள்ளது.

 

இச் சம்பவம் தொடர்பாக பிரதேச மீனவர்கள் வாகரை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு ள்ளனர்.

 

இதேவேளை மட்டக்களப்பு குற்ற தடயவியல் பொலிஸார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

இச்சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லை.

 

சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்றாய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *