ஆரையம்பதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கல்முனை – மட்டக்களப்பு வீதி, ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொறி, பாதசாரி மீது மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த பாதசாரி, சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பாக லொறியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இவ் விபத்து குறித்து காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *