திருகோணமலை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் உணவகம் ஒன்று நடத்திச்செல்லப்படுவதாக கடற்கரை பாதுகாப்பு அதிகார சபையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்து நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறையினர் தயாராகி வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே எதிர்காலத்தில் செயற்பட வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

