கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவினுள் உள்ள அக்குறானை, குடும்பிமலை, முறுத்தானை, பெயரில்லாவெளி போன்ற தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் நிலைபேறான நீர் மற்றும் உணவு தொடர்பாகவும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற இயல்பாக்கத்திற்கு ஏற்ற வகையில் திறன்களை விருத்தி செய்வதற்கான பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் புளியடிக்குளம், மாவட்ட வான்குளம், பிறைசூடிக் குளம், சின்ன முறுத்தானை கால்வாய் புனர்நிர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் சமூதாய மட்ட நீர் வழங்கள் திட்டம் நான்கும், அத்துடன் முப்பது இளம் விவசாயிகளுக்கான நவீன முறையிலான விவசாய பயிற்சிகளும், மாதிரி பண்ணைகளுக்கான உதவி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், கமநல சேவைகள் பிரதி ஆணையாளர் கே. ஜெகன்நாத், திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் சுகுணதாஸ், களமுகாமையாளர் கே.சக்திஸ்வரன், நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் ஞா.சுரேஸ், உயர் அதிகாரிகள் மற்றும் சமூக மட்ட உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
அக்ஷன் நிறுவனமானது கடந்த 12 வருடங்களுக்கு மேலாக இளைஞர்கள், சிறுவர்களின் நலன் மற்றும் வறிய குடும்பங்களின் தொழில் வாண்மை விருத்தி போன்ற பல்வேறுபட்ட சமூகம்சார் செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

