மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி பிரதான வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகளினால் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் முகமாக ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபை தவிசாளர் களத்தில் இறங்கி நடவடிக்கையில் ஈடுபட்டார்.
கட்டாக்காலி மாடுகளினால் உயிரிழப்புக்கள் மற்றும் வாகனங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுவருதுடன் பலர் அபயவங்களைக்கூட இழக்க நேரிடுகின்றது.
இதனடிப்படையில் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச சபையின் கூட்டத் தீர்மானத்திற்கு அமைய குறித்த பிரதேச சபைக்கு உட்பட்ட பல பகுதிகளில் வீதிகளில் சுற்றித் திரியும் கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கை செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் தலைமையில் நேற்று மாலை(20) நடைபெற்றது. இதன்போது பிரதேசசபை சித்தாண்டி வட்டார உறுப்பினர் வவானந்தன் மற்றும் சித்தாண்டி பொதுமக்களும் குறித்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
இதன்போது வீதியில் காணப்பட்ட 10 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிய முறையில் குறித்த மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ஒரு மாட்டிற்கு 5000 ரூபாய் அடிப்படையில் தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன் கட்டாக்காலி மாடுகளை வீதிகளில் விடுவிற்கும் உரிமையாளர்களுக்கு எதிராக எச்சரிக்கையும் தவிசாளரினால் விடுக்கப்பட்டது. இதன்போது தண்டப்பணம் செலுத்திய உரிமையாளர்களிடம் மாடுகள் வழங்கப்பட்டது.

