மருமகளை வன்புணர்ந்த மாமாவுக்கு கடூழிய சிறைத்தண்டனை

தமது சொந்த மருமகளான 12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எதிரியான மாமாவுக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை நேற்று(21) மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்துள்ளார்.

 

இந்நிலையில், நீதிபதி பிரபாகரன் 12 வயது நிரம்பிய சிறுமி மீது மாமா மேற்கொண்ட இந்த சம்பவத்தை அடுத்து,

 

குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடுழிய சிறையும் 3 இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

 

மேலும், நட்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று ஆண்டு சிறை மற்றும் 30,000 ஆயிரம் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

 

அரச சட்டத்தரணி லாபீருடன் அரச சட்டத்தரணி அனுசங்கன், சட்டமா அதிபர் சார்பில் வழக்கை நெறிப்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *