அனுமதிப்பத்திரம் இன்றி மதுபானம் விற்பனை செய்த சந்தேக நபர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமாக அரச மதுபானம் விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை தலைமையாக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

இன்று(23) மாலை கல்முனை தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் படி சோதனை நடவடிக்கையை கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனைக் குடியிருப்பு பகுதியிலுள்ள வீடு ஒன்றில் மேற்கொண்டனர்.

 

இதன்போது சட்டவிரோதமாக அனுமதிபாபத்திரம் இன்றி சூட்சுமமாக மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட மதுபானமும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கல்முனை தலைமையாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 

அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *