மட்டு – கட்டுமுறிவில் அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு

கட்டுமுறிவில் அதிகபட்சமாக 74 மில்லி மீற்றர் மழை விழ்ச்சி பதிவாகியுள்ளது.

 

கட்டு முறிவு பிரதேசத்தில் இன்று(24) காலை 8.30 உடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 74 மில்லி மீற்றர் மழை  பதிவாகியுள்ளது.

 

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக  மட்டக்களப்பில் தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படுகின்றது.

 

இதேவேளை மழைவீழ்ச்சியை அளவிடும் பிரதேசங்களான மட்டக்களப்பில் 66.6 மில்லி மீற்றர், வாகனேரி 55.1 மில்லி மீற்றர், உன்னிச்சையில் 42.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணி பிரதேசத்தில் 33 மில்லி மீற்றர் வீழ்ச்சியும், உறுகாமத்தில் 19.8 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், இதுதவிர குறைந்த மழைவீழ்ச்சியாக  நவகிரி பிரதேசத்தில் 16 மில்லி மீற்றர் மழைவிழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி  ஊடகப்பிரிவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பு பிரதேசத்தில் 2025 ஜனவரி முதல்  இதுவரை காலப்பகுதியில் 1305.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *