தொல்லியல் பெயர்ப்பலகை விவகாரம்; வாழைச்சேனை பிரதேச தவிசாளர் நீதிமன்றில் சரண்

கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் அவசரமாக நடப்பட்ட தொல்பொருள் இடம் என்ற பெயர் பலகை கடந்த 22 ஆம் திகதி மாலை வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உட்பட்ட குழுவினர் மற்றும் பொது மக்கள் இணைந்து அகற்றும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கிரான் பிரதேசத்தில் குடும்பி மலை உட்பட்ட மலை பிரதேசங்கள் பழமை வாய்ந்த ஆலயங்கள் வயல் வெளிகள் போன்ற இடங்களில் காணப்படும் மக்கள் போக்குவரத்து செய்யும் வீதியில் உள்ள சந்திகளில் இப் பெயர் பலகை அமைக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேச மக்கள் சமூக ஆர்வலர்கள் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரனிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் தவிசாளர் உபதவிசாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் இணைந்து அவற்றினை அகற்ற நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது திகிலிவெட்டை. சாராவெளி. பொண்டுகள் சேனை, முருங்கன் தீவு போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து இரவு நேரம் ஆனதால் அதற்றும்பணி இடை நிறுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை ஏனைய பெயர்ப்பலகைகளை அகற்றும் பணியினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

இதனை அடுத்து இச் செயலைப் பலரும் கண்டித்து வந்த நிலையில் இன்று(25) வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் உட்பட மூவர் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் சரணடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *