கட்டுமுறிவு பாலத்தின் மேலால் வெள்ள நீர் பாய்வதால் போக்குவரத்து பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக காற்றுடன் கூடிய கடும் மழையினால் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நாசிவன் தீவு கிராமத்தின் கட்டுமுறிவு பாலத்தின் மேலால் வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதனால் நாசிவன்தீவு கிராமத்துக்கும் வாழைச்சேனைக்குமான இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது .

இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதே வேலை காற்றின் வேகம் காரணமாக பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து வீதியின் குறுக்கே விழுந்துள்ளன .இதனால் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளதுடன் மின்சார வயர்களில் மரம் விழுந்துள்ளதால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது . வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகஸ்தர்கள் வெள்ள நீர் பாய்ந்து ஓடும் பாலத்தின் மேலால் வெள்ள மட்ட அளவினை அளவிடும் அளவுக்கு கோல்களை கொண்டு பாலத்தின் இருமருங்கிலும் நடும் பணியில் ஈடுபட்டனர்.
இதை போன்று மின்சார சபை ஊழியர்கள் மின்சார வயர்கள் அறுந்து கிடக்கும் இடங்களில் நேரில் சென்று பாதுகாப்புடன் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .
காற்றின் வேகத்தில் கிராமத்தில் பல மரங்கள் முறிந்து வீழ்ந்தாலும் அக்கிராமத்தின் அடையாளம் என கருதப்படும் சுமார் 100 வருடங்கள் பழமை வாய்ந்த பாரிய ஆலமரம் வீதியின் குறுக்கே முறிந்து வீழ்ந்துள்ளது .
இதனால் அதன் அருகில் காணப்பட்ட மக்கள் கூடும் கட்டிடம் ஒன்றும் மற்றும் சில குடியிருப்புகளின் கூரைகளும் சேதம் அடைந்துள்ளதுடன் மின்சாரமும் தடைபட்டுள்ளது
செங்கலடி வாழச் சேனை கல்குடா. வாகரை போன்ற இடங்களிலும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது.
அவற்றினை அகற்றும் பணியினை அவ் பகுதி பிரதேச சபையினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.சீரற்ற காலநிலைமை மை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அடைமழை தொடர்ந்து பெய்து வருகிறது கடந்த கடந்த 23ஆம் தேதி தொடக்கம் மாவட்டத்தில் அடைமலை பெய்து வருகிறது .இதனால் தாழ்நிலைப்
பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *