திருகோணமலையில் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சமச்சதீவு பகுதியில் நேற்று(28) அதிகாலை கோடரியால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா, சமச்சதீவைச் சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர் அவரை கோடரியால் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியுடன் இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சடலம் கிண்ணியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

