ஈழத்தின் மூத்த எழுத்தாளரும் இலக்கியவாதி கவிஞர் கலாபூஷணம் செந்தமிழ் திலகம் என பல பட்டங்களை தன்னகத்தே கொண்டமைந்தவருமான சந்தியூரான் என செல்லமாக எல்லோராலும் அழைக்கப்பட்டவரும் தேசிய தலைவரின் விருப்பத்திற்குரியவருமான கணபதி பிள்ளை கிருஷ்ணபிள்ளை இன்று(30) இறைபதமடைந்தார்.
இவர் தமிழரசுக் கட்சியின் தேசிய வாலிபர் முன்னணியின் தலைவர் கி. சேபோனின் தந்தையும் ஆவார்.
இவர் ஆசிரியராக அதிபராக நாட்டின் பல பாகங்களிலும் கடமையாற்றி மாணவர்களின் அறிவுக்கண்ணை திறந்து வைத்தவர். தமிழை நேசித்த தமிழ் பற்றாளர் தமிழ் மக்களுக்காக தேசியம் சார்பாககுரல் கொடுத்து அடிக்கடிசிறைச்சாலைக்கு சென்ற நெஞ்சுறுதியுடன் பல அரசியல் வரலாற்று பின்னணியை கொண்டவர்.
தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்து ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து தமிழரசுக் கட்சிக்கு முக்கிய பங்காற்றியவர். கட்சியின் வளர்ச்சிக்கு ஆதரவாக அக்காலத்தில் தீவிரமாக செயல்பட்டதன் காரணமாக அடிக்கடி அரச கடமை இட மாற்றங்களுடன் பூசா சிறைச்சாலையில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியிருந்தார்.
இவரை தமிழரசுக்கட்சியின் தலைவர் அமிர்தலிங்கம் ஐயா சந்தியூரான் என பெயர் சூட்டி செல்லமாக அழைத்து வந்தார். இவ்வாறான நிலையில் மேதகு தேசிய தலைவரின் பாசத்துக்கும் நேசத்திற்கும் உரியவராக இருந்ததன் காரணமாக அவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் சார்பாக யுத்த கால போர் கண்காணிப்புக் குழு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
பேசிய தலைவரை இரண்டு தடவைகள் சந்தித்து தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை சார்பாக கலந்துரையாடி ஆலோசனை வழங்கியிருந்தார்.
எனவே தேசிய தலைவரின் நம்பிக்கைக்குரியவராகவும் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இவர் தனது மகனை விடுதலைப் போராட்டத்திற்காக தாரைவார்த்துக் கொடுத்த மாவீரரின்தந்தை.
இவரது இழப்பானது மாவட்டத்தில் பேரிழப்பாகும் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உடல்நிலை பாதிப்பால் இயற்கை எய்தினார்.

