நிவாரணப் பொருட்களை ஏற்றிய லொறிகள் வாழைச்சேனை பள்ளிவாயலில் இருந்து புறப்பட்டது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிய லொறிகள் இன்று(04) காலை வாழைச்சேனை முகைதீன் ஜிம் ஆ பள்ளிவாயலில் இருந்து துஆ பிரார்த்தனையுடன் புறப்பட்டது.

வாழைச்சேனை முகைதீன் ஜிம் ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் அதனோடு இணைந்த எட்டு பள்ளிவாயல்கள், வாழைச்சேனை வர்த்தக சங்கம் மீனவர் அமைப்புக்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்கள் என்பன இணைந்து நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவற்றினை இன மதம் பேதம் பார்க்காமல் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக இவை எடுத்துச் செல்லப்படுவதாக முகைதீன் ஜிம் ஆ பள்ளிவாயலின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

சேகரிக்கப்பட்ட பொருட்கள் திருகோணமலை, பொலநறுவை மற்றும் மத்திய மலைநாடு போன்ற இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சேகரிக்கப்பட்டவையாகும்.

எதிர்வரும் சனிக்கிழமையன்று மலைநாட்டு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்கு பொருட்கள் சேகரிப்பு நடவடிக்கை இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *