வட மாகாண ஆளுநரால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

வட மாகாணத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த பாடசாலைகள் மற்றும் வீதி அமைப்பு அவசரமாக பழுதுபார்க்கப்பட்டு அவற்றின் அசல் நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.
வவுனியாவின் மருதன்மடுவ பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை விநியோகிப்பதில் பங்கேற்கும் அதே வேளையில், வட மாகாண சபை இதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து வருவதாக ஆளுநர் தெரிவித்தார்.
இந்தப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு ரூ. 1200 வீதம், ஒரு வாரத்திற்கு போதுமான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் சரத்சந்திர ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *