ஆலையடிவேம்பில் 241 ஆம் காலாட் படைப்பிரிவினரால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

இலங்கை இராணுவத்தினரின் வெள்ள அனர்த்த மனிதாபிமான நிவாரணப் பணிகள் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைவாக அக்கரைப்பற்று 241 ஆம் காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாச்சிக்குடா பிரிவில் 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

241ஆம் படைப்பிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சுகத் திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 24 ஆவது காலாட்படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜயவீர, உதவிக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டயஸ், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபான பிராந்திய முகாமையாளர் சஜீவ், ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராம நிர்வாக அதிகாரி பரிமளவாணி சில்வெஸ்டர் மற்றும் கிராம உத்தியோகத்தர் சுஜித் மதுசங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது நிவாரணத்தினை பெற்றுக்கொண்ட மக்கள் இராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *