பெரண்டினா நிறுவனத்தினால் அத்தியாவசியப்பொருட்கள் அரசாங்க அதிபரிடம் கையளிப்பு

பெரண்டினா அபிவிருத்திச் சேவை நிறுவனத்தினால் மட்டக்களப்பு அரசாங்க அதிபரிடம் அத்தியாவசியப் பொருட்கள் இன்று(05) கையளிக்கப்பட்டது.

 

குறித்த அத்தியாவசியப் பொருட்களானது பேரிடர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக பெரண்டினா அபிவிருத்திச் சேவை நிறுவனத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய முகாமையாளர் தினேசினால் மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

 

இதன்போது பெரண்டினா நுண்நிதி நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

மேலும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கும் இந்த அத்தியாவசியப் பொருட்கள் கையளிக்கப்பட்டதாக முகாமையாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *