கொழும்பில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தின் ஆதரவுடனும், கம்பஹா மாவட்ட செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒருங்கிணைப்புடன், இந்த வெள்ள நிவாரண மற்றும் புனர்வாழ்வுத் திட்டம் நேற்று முன்தினம்(06) கம்பஹா பிரதேச செயலகப் பிரிவில், கோணகஹ-1 கிராம உத்தியோகத்தர் பிரிவில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது நியூசிலாந்து பிரதி உயர்ஸ்தானிகர் கேப்ரியேல் ஐசாக், அம்கோர் நிறுவன தேசியப் பணிப்பாளர் முரளிதரன், அம்கோர் நிறுவன நிதிப் பணிப்பாளர் துமிந்த பெரேரா, கம்பஹா பிரதேச செயலாளர் திருமதி நாதீஷானி அமரசிங்க, கோணகஹ–1 கிராம சேவைகள் உத்தியோகத்தர் மினிதந்திரி, அம்கோர் குழுவினரும் நியூசிலாந்து உயர் ஆணைய அதிகாரிகளும் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.
2020 ஆண்டு கொரோனா காலத்திலும் கம்பஹா மாவட்டத்தில் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளில் அம்கோர் நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


