இவ்விழாவில், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற பேத்தாழை பொது நூலகம்
பிரதேச சபை வாரியாக தேசிய ரீதியில் மீண்டும் முதல் இடத்தினை பெற்றுக் கொண்டது.
அத்தோடு வாழைச்சேனை பொதுநூலகம், விநாயகபுரம் பொதுநூலகம், சந்திவெளி பொதுநூலகம், தேவபுரம் பொதுநூலகம் ஆகியனவும் வாசிப்பு மாத நிகழ்வுகளை சிறப்பாக ஒழுங்கமைத்தமைக்காக விருது வழங்கி பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை ரீதியாக 2024ஆம் வருடத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட நூலகங்களாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளவற்றுள் அதிக நூலகங்களைக் கொண்ட பிரதேச சபையாக மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை விளங்குகின்றது.
தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் விழாவில், நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் தலைவர் கலாநிதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. சுனில், பணிப்பாளர் செனானி பண்டார மற்றும் பிரதிப் பணிப்பாளர் இரோமி விஜேசுந்தர மற்றும் தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உட்பட நாடு முழுதிலுமிருந்து விருதுக்காக தேர்வுசெய்யப்பட்ட நூலகங்களில் பணிபுரிகின்ற நூலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


