400 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 400 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு(இன்று19) கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்றது.

 

கிண்ணியா பிரதேச செயலகத்தின் செயலாளர் தலைமையில், ஜம்மியத்து ஸபாப் ஏஎம்வைஎஸ் நிறுவனத்தின் தலைவர் மௌலவி தாஸீம் ஏற்பாட்டில் இந்த நிவாரண நிகழ்வு நடைபெற்றது.

 

திடீர் மரண விசாரணை அதிகாரி அஷ்ஷெய்க் ஷாபியின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *