மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பாடசாலைக்கு முன்னால் நேற்று(19) இரவு பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேன் செட்டிபாளையம் பாடசாலைக்கு முன்னால் பயணிக்கும்போது சாரதியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேன் விபத்தில் சிக்கிய சந்தர்ப்பத்தில் சாரதி மட்டுமே வேனில் பயணித்துள்ளதோடு விபத்தில் காயமடைந்த சாரதி அவசர சேவை நோயாளர் காவுவண்டி மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அப்பகுதியில் தொடர்ந்தும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்ற நிலையில் இவ்விபத்தில் குறித்த வேன் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது. இதேவேளை விபத்து ஏற்பட்ட இடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

