மட்டக்களப்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றம்

மட்டக்களப்பு – மாநகர சபையின் 2026ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று(22) மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்விவாதத்தின் முடிவில் பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 22உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 3 உறுப்பினர்கள் வாக்களித்ததுடன் 8 உறுப்பினர்கள் நடுநிலை வைத்தனர்.
ஒரு உறுப்பினர் சபைக்கு சமூகமளிக்கவில்லை அந்த வகையில் வரவுசெலவுத் திட்டமானது 19 மேலதிக வாக்குகளால் வாக்கீடுகளால் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *