மட்டக்களப்பில் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 20 ம் ஆண்டு நினைவேந்தலையிட்டு இன்று(25) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இருந்து மாநகரசபை மண்டபம் வரை படுகொலைக்கு நீதி கோனி ஆர்பாட்டம் இடம்பெற்றது.
இதில் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகரசபை முதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

