உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் 21 வது நினைவேந்தல் நிகழ்வு

21 வது சுனாமி நினைவேந்தல் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 9:30 மணியளவில் பொது நினைவுது தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது.

 

இதில் மலர் மாலையினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலைமை கிராம சேவையாளர் தோமஸ் யூட் மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

 

அனதைத்தொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் தங்கவேல் தங்கரூபன் உட்பட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அணிவித்து வைத்ததைத் தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெற்றது.

 

தொடர்ந்து தேசியகா கொடியினை மருதங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்றியதை தொடர்ந்து பொது ஈகைச்சுடரினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலைமை கிராமசேவகர் தோமஸ் யூட் ஏற்றிவைக்க சம நேரத்தில் சுனாமியால் காவு கொள்ளப்பட்டவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

தொடர்ந்து அஞ்சலி உரைகளை வடமராட்சி கிழக்கு தலைமை கிராம சேவகர் செபமாலை தோமஸ்யூட், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் ஆகியோர் நிகழ்த்தினார்.

 

இன்றைய நினைவேந்தலில் சுனாமியால் காவுகொள்ளப்பட்டவர்களது உறவுகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், என பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *