நிவாரணப் பொருட்களை கிராம சேவையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு

மாலைதீவு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களின் ஒரு தொகுதி நேரடியாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களுக்காக வழங்கி வைக்கப்பட்டு இருந்தது.

 

அவற்றை அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்கும் வகையில் அப்பகுதி கிராம சேவையாளரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று(29) செங்கலடி பிரதேச செயலாளர் எஸ். தனபால் தலைமையில் இடம்பெற்றது.

 

இதன்போது 10 இலட்சம் ரூபா பெறுமதியான மீன் டின்கள், சமையல் உபகரணங்கள் என்பன பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட தன்னாமுனை மற்றும் மயிலம்பாவெளி குமார வேலி ஆர் கிராமம் பகுதிகளுக்குரிய கிராம சேவகர்களிடம் கையளிக்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் இப்பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆறுமுகம் சுதாகரன், அரச உயர் அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் இப்பிரதேச உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *