சம்மாந்துறை கல்வி வலய கமு/சது/ அல் – அமீர் வித்தியாலத்தின் தரம் 09 இல் கல்வி பயிலும் மாணவன் ஏ.எம்.எம்.அப்ஹாம் தன்னியக்க வெள்ள வீதித் தடை உபகரணத்தை கண்டுபிடித்து மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றார்.
அவரின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ஐம்பது ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு சம்மாந்துறை பிரதேச சபை அனைத்து உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவு கிடைக்கப்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் விசேட அமர்வு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் சபா மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பின்னர் இம் மாணவனுக்கு காசோலை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

