அரசின் “கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் “வளமான நாடு அழகான வாழ்க்கை ” எனும் தொனிப்பொருளின் கீழ் கிராமம் தோறும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியல் இடம்பெற்று வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து நடமாடும் சேவை மற்றும் விஷேட பொதுமக்களுக்கான சேவைத் திட்டங்கள் கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உபகரணங்களை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னமின் ஏற்பாட்டில் நேற்று(30) கல்லடி முகத்தூவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்றன.
இந் நிகழ்வின் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றன.
ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் தெரிவு செய்யப்பட்ட மஞ்சந்தொடுவாய் தெற்கு பிரிவில் 13 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், சிசி 48 கொள்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள், மேலும் நாவற்குடா கிழக்குப் பிரிவில் 4 தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கல்லடி சமுர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டதுடன் சமூக சேவை திணைக்களத்தினூடாக விசேட தேவைக்குறியவருக்கான சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் மகளிர் மற்றும் மாதர்கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஊடாக சுய தொழில் மேற்கொள்ளும் பெண்களுக்ககான சுயதொழில் வாழ்வாதார கடன் வழங்கப்பட்டது. 10 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் வரையிலான நிதி வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்களான சுபா சதாகரன், லக்சன்யா பிரசந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கங்காதரன், கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் மாவட்ட இணைப்பாளர் பேபியன் பாத்திலட், மாநகரசபை உறுப்பினர் வாணி செல்லப்பெருமாள், உயர் அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

