செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய புது வருட பிறப்பு விழா

யாழ் மறைமாவட்ட வரலாற்று சிறப்புமிக்க செம்பியன் பற்று பங்கின் இலங்கை முழுவதும் இருந்து அதிக பக்தர்கள் வருகை தரும் உலக பிரசித்தி பெற்ற செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் 2026ம் ஆண்டு புது வருட பிறப்பு விழா மிக இடம்பெற்றது.

 

 

இவ் புதுவருட பிறப்பு விழா நேற்றைய தினம் நள்ளிரவு 11மணியளவில் திருச்செபமாலையுடன் 11:50 மணியளவில் செம்பியன் பற்று பங்குத்தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் திருப்பலி ஆரம்பமாகி காலை 1:30 மணியளவில் திருப்பலி நிறைவு பெற்றது.

 

 

இத் திருப்பலியில் பொது மக்கள், வடமராட்சி கிழக்கு பகுதியில் இயங்கும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அருட்தந்தையினர், அருட்சகோதரியினர், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *