பச்சிலைப்பள்ளி தம்பலகாமம் பகுதியில் கிராமிய வீதி அடிக்கல் நாட்டுநிகழ்வு

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கிளிநொச்சி – பளை பகுதியில் அமைந்துள்ள தம்பலகாமம் நெளியாய் அம்மன் கோவில் வீதியைப் புனரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(01)இடம்பெற்றது.

 

 

இந்த நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில் நடைபெற்றது.

 

 

இதன் போது பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட இந்த வீதியை புனரமைத்துத் தருமாறு இந்த பகுதி மக்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் ஊடாக இவ்வீதி அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *