இராமர் பாலம் தொடர்பான பெயர்ப்பலகை நீக்குவதற்கு ஆவண செய்யுமாறு அருட்தந்தை கிறிஸ்துநாயகம் மன்னார் நகரசபை தவிசாளருக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கத்தோலிக்கர்களுடன் மத நல்லிணக்கம் பேசும் இலங்கைத் தமிழ் இந்துக்களே, சைவர்களே இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
இத்தகைய மத வெறியர்கள் சமூகத்தில் இருக்கலாமா? சமூகம் இவர்களை ஒதுக்கப்படவேண்டாமா? சிந்தியுங்கள் சைவர்களே இந்துக்களே களத்தில் இறங்குங்கள்.
தவிசாளர், நகரசபை. மன்னார்.
கனம் தவிசாளர் அவர்களுக்கு,
இனிய வணக்கம்!
மன்னார் நகரத்தின் நுழைவாயிலில்
சுற்றுலாத்துறை அமைச்சினால் நிறுவப்பட்டுள்ள பெயர்ப்பலகை தொடர்பாக
30.12.2025 மன்னார் நகரத்தின் நுழைவாயிலில் (பிரதான பாலத்தின் அருகாமையில்) சுற்றுலாத்துறை அமைச்சினால் இராமர் பாலம் தொடர்பான ஒரு பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ளது, இந்துசமயக் கடவுளர்களின் படங்களைத் தாங்கியதான இந்தப் பெயர்ப்பலகையானது மன்னாரின் மதநல்லிணக்கத்தைப் பாதிப்பதாகவும், மதங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் சீர்குலைத்து முறுகல்நிலையை, குழப்பத்தைத் தோற்றுவிப்பதாகவும் அமைந்துள்ளது.
இப்பெயர்ப்பலகை தொடர்பாக பொதுமக்கள் பலர் தமது அதிருப்தியை, எதிர்ப்பை நாளாந்தம் அனைத்து மதமும் எமக்குத் தெரிவித்தவண்ணமே உள்ளனர். எனவே மன்னாரில் உள்ள மக்களின் நன்மைகருதி இப்பெயர்ப்பலகையை இவ்விடத்தில் இருந்து நீக்குவதற்கு ஆவண செய்யுமாறு தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இது தொடர்பான தங்களின் நடவடிக்கைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இப்படிக்கு,
உண்மையுள்ள,
அருட்தந்தை பி, கிறிஸ்துநாயகம்
மன்னார் மறைக்கோட்ட முதல்வர்
பங்குத்தந்தை – புனித செபஸ்தியார் பேராலயம்
மன்னார்
என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


