பருத்தித்துறை பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட தம்பசிட்டி பிரதான வீதியில் இருந்து குறுக்காக செல்லும் பதிவு செய்யப்படாத வீதி ஒன்றினை பருத்தித்துறை நகர சபையின் தவிசாளரின் தன்னிச்சையான முடிவின் அடிப்படையில் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர்களுக்குத் தெரியாமல் பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.
குறித்த வீதியானது சட்டத்திற்கு முரணாகவும் பருத்தித்துறைபிரதேச சபையின் எந்தவித அனுமதியின்றியும் 22 மீற்றர் கொங்கிறீட் வீதி பருத்தித்துறை நகரசபையின் தவிசாளரின் அனுமதிக்கமைவாக போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது உள்ளூராட்சி சட்டவரம்பை மீறியே அமைக்கப்பட்டுள்ளது எனவும் இதனால் பருத்தித்துறை நகர சபை எல்லைக்கு உட்பட்ட மக்களின் பணம் வீணாக பயண்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அயலில் வசிக்கும் வீடுகளுக்கு மழைக்காலங்களில் வெள்ள நீரோட்டங்கள் வருவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றதோடு குறித்த இடத்தில் வாழும் மக்கள் எதிர் காலத்தில் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

