போக்குவரத்து வசதிகளை வழங்கும் கடற்படையின் நடவடிக்கை நிறைவு

நிலவிய மோசமான வானிலை காரணமாக இடிந்து விழுந்த நாயாறு பாலத்தை சரிசெய்யும் வரை, அப்பகுதி மக்களுக்கு களப்பு வழியாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக கடற்படையால் 2025 நவம்பர் 29 அன்று தொடங்கப்பட்ட சிறப்பு படகு சேவை நேற்று(06) வெற்றிகரமாக நிறைவடைந்தது.

 

அதன்படி, நாயாறு முதல் நாயாறு குளம் வழியாக கோகிலாய் வரை போக்குவரத்து வசதிகளை வழங்க கடற்படை மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் கீழ், 2025 நவம்பர் 29 முதல் நேற்றுவரை பதினேழாயிரத்து எண்ணூற்று அறுபது (17,860) நபர்களும், ஆயிரத்து தொள்ளாயிரத்து பன்னிரண்டு (1912) மோட்டார் சைக்கிள்களும் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டதுடன், நாயாறு பாலத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்குப் பிறகு, நேற்று இந்த நடவடிக்கை நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *