வடக்கு மாகாணத்தில் விவசாய செய்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள களை நெல்லை ஒன்றிணைந்து கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று(08) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலானது வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வட்டக்கச்சி விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடல் வடமாகாண விவசாயத்திணைக்கள பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

