குறிகட்டுவான் – நெடுந்தீவு படகு சேவை இன்று மூன்றாவது நாளாகவும் நிறுத்தம்

காலநிலை சீரின்மை காரணமாக குறிகட்டுவான் – நெடுந்தீவிற்கு இடையிலான படகு போக்குவரத்து சேவைகள் இன்று(10) மூன்றாவது நாளாக இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை சீரின்மை காரணமாக கடற்கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக குறித்த படகு போக்குவரத்து சேவையினை செயற்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்றைய காலநிலை நிலைமையினை கருத்தில் கொண்டே நாளை(11) சேவை தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *