கிளிநொச்சியில் புதையல் தோண்ட முற்பட்ட நான்கு பேர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைவாக, கிளிநொச்சி ஏ-09 சாலையில் அமைந்துள்ள மின்சார வாரியத்திற்குச் சொந்தமான சுற்றுலா இல்லத்தில் சிறப்பு அதிரடிப்படை அதுகோரல உள்ளிட்ட அதிகாரிகள் குழு இன்று(11) 12.45 மணிக்கு, மின்சார வாரியத்தில் பணிபுரியும் 04 ஊழியர்களைக் கைது செய்துள்ளனர்.

 

அனுமதியின்றி அரசாங்க நிலத்தை சுரண்டுதல் மற்றும் சுரங்கம் தோண்டுதல் குற்றத்திற்காக சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த சந்தேக நபர்கள் மற்றும் தடயப் பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் குறித்த சந்தேக நபர்களை நாளை(12) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *