பல வருடங்களின் பின்பு பரந்தன் இரசாயன தொழிற்சாலை எதிர்வரும் 21ம் திகதி மீள இயங்குவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் பரந்தன் இரசாயன தொழிற்சாலை மீள் உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் முரளிதரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(13) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் தலைவர் சதானந்தன் நேசராஜன், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், மாவட்டத்தின் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மாவட்டத்தின் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு குறித்த தொழிற்சாலையின் மீளுருவாக்கம் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

