நாகர்கோவிலில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று(14) அதிகாலை 3 மணியளவில் பெருந்தொகையான கேரள கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

இன்று துன்னாலை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் நாகர்கோவில் பகுதியில் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது 14 கிலோ கிராம் எடை உள்ள ஒன்பது பொதிகள் அடங்கிய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது இதன் போது சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்கு மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளையும் சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *