கிளிநொச்சி பகுதியிலிருந்து நேற்று இரவு மணல் ஏற்றிப் பயணித்த டிப்பர் வாகனம் நாவற்குழி பகுதியில் நித்திரைக் கலக்கம் காரணமாக மதில், மின்கம்பம், தொலைத்தொடர்புக் கம்பம் மற்றும் சுவர் என்பவற்றை மோதித்தள்ளியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வட்டக்கச்சியைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜீவன் விதுசன் மற்றும் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயது உடைய நாகராஜா ஜீவராஜ் குறித்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இறந்த இளைஞர்களின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

