இராணுவத்தினரின் தகவலின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து 28 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று று பிற்பகல் இன்பருட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கைப்பற்றப்பட்டுள்ள 28 கிலோ கஞ்சா பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் பருத்திதுறை பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பருத்திதுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தலைமை பொலிஸ் பொறுப்ப,திகாரி பிரயந்த அமரசிங்க தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

