பொற்பதி மக்கள் நலன்புரி சங்கத்தின் 7 ம் ஆண்டு நிறைவு விழா

பொற்பதி மக்கள் நலன்புரி சங்கத்தின் 7 ம் ஆண்டு நிறைவு விழா அதன் தலைவர் சிவலிங்கம் சிறிகலாதான் தலைமையில் நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் அதன் தலைமை காரியாலயமான பொற்பதி குடத்தனையில் இடம்பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கல சுடர்களை ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் வேந்தன், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சுரேஷ்குமார், மக்கள் நலன்புரி சங்க இயக்குனர் சந்துரு, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஆகஸ்ரின், சுரேஷ்குமார் மற்றுமு பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயகாந்தன் ஜெயகோபி, எனப் பலரும் ஏற்றினர்.
தொடர்ந்து வரவேற்புரை இடம்பெற்றதனைத் தொடர்ந்து கற்கோவளம் முன்பள்ளி மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தலைமையுரையினை பொற்பதி மக்கள் நலன்புரி சங்கத்தின் தலைவர் சிவலிங்கம் சிறிகலாதன் நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து விஜய் டிவி யூனியர் பாடல் போட்டிக்கு தெரிவாகிய கற்கோவளம் சிறுமி அனுஷ்காவின் பாடல்கள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து கல்வி சாதனையாளர்களான செல்வன் கர்சன், செல்வன் ஜனார்த்தன், சாருஷா, ஆகியோர் க.பொ.த உயர் தரத்தில் சித்தியெய்தியமைக்காக கௌரவிக்கப்பட்டதுடன் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் 142 புள்ளிகளைப் பெற்ற அதிசயனும் கௌரவிக்கபட்டனர்.
வாழ்த்துரைகளை ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் சுரேஷ்குமார், சந்துரு, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆகஸ்ரின், ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச சபை, நகரசபை உறுப்பினர்கள், சங்க நிர்வாகிகள், நலன்விரும்பிகள் மற்றும் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *