“மண்ணின் மறவர்கள்” வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுத்தொடரின் ஆரம்ப நிகழ்வு

முல்லைத்தீவு – கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் அமரர் தேவராசா பகீரதன் ஞாபகார்த்த “மண்ணின் மறவர்கள்” வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுபோட்டி நேற்று முன்தினம்(16) கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமானது.

அந்தவகையில் விருந்தினர்களது வரவேற்புடன் ஆரம்பமான இந்நிகழ்வில், தொடர்ந்து மங்கலவிளக்கேற்றல் இடம்பெற்றது.

தொடர்ந்து அமரர் தேவராசா பகீரதனின் திரு உருவப்படத்திற்கு சுடரேற்றி, மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலியும் மேற்கொள்ளப்பட்டது.

அதனையடுத்து உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதற்போட்டி ஆரம்பமானது. குறித்த உதைபந்தாட்ட சுற்றுத் தொடரின் முதற்போட்டி செல்வபுரம் சந்திரன் விளையாட்டுக்கழக அணியினருக்கும், தியோகுநகர் அலைகள் விளையாட்டுக்கழக அணியினருக்குமிடையில் இடம்பெற்றது.

மேலும் இந்த உதைபந்தாட்டச் சுற்றுத் தொடரின் ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, கரைதுறைப்பற்று பிரதேசசபையின் செயலாளர் இராஜயோகினி ஜெயக்குமார், கள்ளப்பாடு உதவுங்கரங்கள் அமைப்பின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேவேளை அமரர் தேவராசா பகீரதனினு பெற்றோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *