பொருளாதார நெருக்கடி காரணமாக 2023 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்ட கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இத்திட்டம் அமையும்.
இதற்காக ஏற்கனவே மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 23,456 மில்லியன் ஆக திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி 2026 முதல் 2031 ஆம் ஆண்டிற்குள் பணிகளை முடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

